வேலூரில் உணவக உரிமையாளருக்கு கூகுள்பே-ல் தவறுதலாக அனுப்பப்பட்ட 75 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய்,சிங்கராசு. அவர்கள் 2 பேரும் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நவீன் என்பவரின் உணவகத்திற்க்கு சாப்பிட சென்றுள்ளனர். உணவிற்கான பணத்தை கூகுள்பே-ல் அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய சிங்கராசு அவரது உறவினருக்கு கூகுள் பேயில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அனுப்பியுள்ளார். இதனிடையே உறவினரின் வங்கி கணக்கில் பணம் வராததால் […]
