சொத்து தகராறில் தாய் மற்றும் தங்கையை விவசாயி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி அருகேயுள்ள தலைவர்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு இந்திராணி (70) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்களுக்கு முனிராஜ் (45) என்ற மகனும், சின்னம்மா (35) மற்றும் சூரியகலா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில், முனிராஜ் மற்றும் சூரியகலா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.. சின்னம்மாவுக்கு இன்னும் திருமணம் […]
