மூதாட்டி குடும்பத்துடன் நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் கிராமத்தில் மூதாட்டி சரஸ்வதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டி சரஸ்வதி கூறியபோது, எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் இருவரும் […]
