திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016 ன் கீழ் வேலூர் மாநகராட்சியில் யாராவது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன. தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 […]
