வேலூர் மாவட்ட காவல் சரக டிஐஜி யாக ஆனி விஜயா இருக்கிறார். இவர் ஒரு நேர்மையான அதிகாரி என்றும், தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை திறமையாக செய்து முடிப்பதில் வல்லவர் என்றும் காவல்துறை தரப்பில் பரவலாக பேச்சு இருக்கிறது. இந்நிலையில் டிஐஜி ஆனி விஜயா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு புதிதாக பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியல் வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா, வேலூர் சரக டிஐஜி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று […]
