வேலூரில் கிராம உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் பணிகள் காலியாக இருக்கும் நிலையில் அதை நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அதன்படி மாற்றம் வாரியாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் 40 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்ற 4-ம் தேதி நடைபெற்றதில் 1762 பேர் விண்ணப்பித்தார்கள். ஆனால் 411 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தார்கள். இந்த நிலையில் வேலூர் தாலுகா […]
