கடலூரில் புதிதாக கட்ட இருந்த பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள்,தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. ஆனால் பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக அரசு, தனியார் பேருந்துகள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது. மேலும் பேருந்து நிலையம் அருகே பூமார்க்கெட், ரயில் நிலையம் உள்ளதால் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்திற்குள் காலை, […]
