மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் வீடு சேதமானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று வீசியதால் திரௌபதி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேருடன் சாய்ந்தது. இந்த மரம் விழுந்ததால் நடராஜன் வீடு சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ […]
