பெரம்பலூர் அருகே வேப்பமரத்தில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் தீபக் என்பவர் வசித்து வந்தார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வேப்பமரம் ஒன்றில் தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் […]
