ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேன் சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை பூந்தமல்லியை சேர்ந்த 13 பேர் ஒரு வேனில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கூடலூர் வழியாக முதுமலைக்கு வேணியில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே வந்த பொது வேன் திடீரென கட்டுபாட்டை […]
