வேன் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் பால் வியாபாரியான முத்துமணி (வயது 71) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக காரியாபட்டி – நரிக்குடி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வேன் முத்துமணியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் முத்துமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
