நாகையில் இரண்டாவது நாளாக கரை ஒதுங்கிய 3 ஏலக்காய் மூட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கோடியக்காடு, வாணவன்மகாதேவி ஆகிய பல மீனவ கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் கடற்பகுதி வழியாக மஞ்சள் மற்றும் கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதை காவல்துறையினர் அடிக்கடி பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் சென்ற திங்கட்கிழமை அன்று முனங்காடு கடற்கரை பகுதியில் 25 கிலோ ஏலக்காய் கொண்ட இரண்டு மூட்டைகள் கரை ஒதுங்கி […]
