மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் […]
