திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள சிலைகள் மாயமானதாக கடந்த 50 வருடங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது மாயமான இரண்டு சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிலைகளை மீட்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் மூலமாக ஆவணங்களை அனுப்பி யுனெஸ்கோ […]
