வேட்பாளர் ஆதரவாளர்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வள்ளியூர் யூனியன் திருமலாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு கலை சுமிதா, பவானி, இந்திரா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குணசேகரனின் மனைவி இந்திரா ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் நடந்துள்ளது. அப்போது இந்திரா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பவானி மளிகை கடை நடத்தியதற்கான தொழில் […]
