டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் இடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக லீவிஸ் 35 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். […]
