ஒரு வாரத்திற்குப் பிறகு மழை குறைந்துள்ள நிலையில் தாமிரபரணி ஆற்று ஓரங்களில் வெள்ளம் குறைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால், தாமிரபரணி ஆற்றில் நேற்று வரை வெள்ளப்பெருக்கு குறையாமல் இருந்தது. ஆனால் நேற்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியுள்ளதால், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையிலிருந்து 1995 கன […]
