தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாவட்டங்கள் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]
