சங்கராபுரம் அருகே வெள்ளத்தில் சிக்கி 600 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருத்தபிள்ளை, பழனி, அஞ்சலை. இவர்கள் மூவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரிகரை ஓடை அருகே பட்டி அமைத்து அதில் 600க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை அடைத்து வளர்த்து வந்தனர். தற்போது சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் […]
