வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்பி முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே மே 16ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் […]
