உணவில் கட்டை விரலை வைத்து பரிமாறிய உணவகத்திற்கு பொலிவிய அரசு அபராதம் விதித்துள்ளது. பொலிவியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சாப்பிடுவதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பர்கரை ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து அவர் பர்கரை சாப்பிடுவதற்காக வாயில் வைத்த பொழுது ஏதோ தட்டுபட்டுள்ளது. உடனே அவர் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அதில் இருந்தது ஒரு மனிதனின் கட்டைவிரல் ஆகும். இதனை அந்த பெண் அங்கிருந்த உணவக ஊழியரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். […]
