புற்றுநோயால் சிரமப்படும் கணவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்வதற்காக பெல்ஜியம் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான சோஃபி வில்மஸ் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளாா். கடந்த 2019-2020ஆம் வருடம் வரை பிரதமராகப் பொறுப்பு வகித்த வில்மஸ், ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கிறிஸ்டோஃபா் ஸ்டோனை சென்ற 2009-ஆம் ஆண்டு மணந்தாா். இப்போது ஸ்டோனுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதைத் அடுத்து தன் பதவியை ராஜினாமா செய்வதாக வில்மஸ் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, என் கணவா் மூளைப் புற்றுநோயால் […]
