மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வங்கதேச பிரதமரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்க்லா இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான 50 ஆண்டுகால நட்பிற்கு பிரதமர் மோடியின் சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அந்நாட்டின் 50வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் […]
