மியான்மர் நாட்டில் உள்ள இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் முதல் முறையாக சீன நாட்டின் வெளியுறவு துறை மந்திரியான வாங் யி வருகை தந்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். சீன நாட்டின் தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம், மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் […]
