உணவு மற்றும் வேளாண் அமைப்பான எஃப்ஏஓ-வின் 75 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75ஆம் ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியில் இந்தியாவுக்கும், எஃப்ஏஓ அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பை குறிக்கும் வகையில் 75 ரூபாய் சிறப்பு நினைவு நாணயத்தை மோடி வெளியிட்டார். அண்மையில் உருவாக்கப்பட்ட உயிர்சரி ஊட்டிய 8 பயிர்களின் […]
