விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்ற கடத்தல் தொழில் தொடர்ந்து வருவதால் அதனை தடுப்பதற்காக அம்மாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். […]
