15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . குறிப்பாக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகிய வீரர்கள் 10 முதல் 15 நாட்கள் வரை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. […]
