ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள காக்கூர் அருகே உள்ள புளியங்குடியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சண்முகவள்ளி. இந்நிலையில் குமரவேல் துபாயில் ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 26ஆம் தேதி குமரவேல் உயிரிழந்துவிட்டார் என அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளார். ஆனால் […]
