வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மனைவி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் வசித்து வரும் ராமர் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கலைநிவேதியா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கலைநிவேதியா மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 13 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் மீன் […]
