இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை அந்நாட்டு சபாநாயகர் மகிந்த யாப்பா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். திவால் நிலைக்கு சென்று விட்ட இலங்கை நாட்டு மக்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டு வருகின்றது. இதனால் கொதித்து போயிருக்கும் இலங்கை மக்கள் கடந்த 9-ந்தேதி பெரும் கிளர்ச்சியில் இறங்கினர். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்புவில் ஒன்று திரண்டு அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிலிருந்து வெளியேறி […]
