வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இனி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பணம் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கென வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்தம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். […]
