உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், நொய்யல், தவிட்டுப்பாளையம், ஓலப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்து வெள்ளம் தயாரிக்கும் அதிபர்களிடம் விற்பனை செய்கின்றார்கள். கரும்புகளை வாங்கிய வெள்ளம் தயாரிப்பு ஆலை, கரும்புகளை சாறு பிளிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறார்கள். இதன்பின் வெள்ளங்களை உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றார்கள். […]
