வெங்காய விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். திருச்சி மாநகரில் உள்ள 14 பசுமை பண்ணை அங்காடிகளில் 11 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனைக்கு வந்தது. கேகே நகரில் உள்ள பண்ணை பசுமை அங்காடியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளி சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து […]
