இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற ,ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் இருந்த ஜோகோவிச்(செர்பியா) ,3 வது இடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுடன் மோதினார். இதில் தொடக்கத்திலிருந்து அதிரடி காட்டிய நடால், முதல் செட்டில் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் 2-வது செட்டில் ஜோகோவிச், 6-1 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். பரபரப்பான 3 […]
