பெங்களூருவில் ப்ரோ கபடி சீசன் 9 நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கு கொள்கின்றனர். இந்த போட்டி டிசம்பர் மாதம் வரை நடைபெறும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி அணியினர் யு மும்பா அணியுடனும், பெங்களூரு புல்ஸ் அணியினர் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடனும், ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியினர் உபி யோதா அணியுடனும் மோதினர். […]
