திண்டுக்கல் மாவட்டத்தில் படையெடுத்து வந்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் 50 ஏக்கர் சோளப் பயிர்களை தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய வட்டாரங்களில் சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அந்தப் பயிர்கள் தற்போது ஓரளவு வளர்ந்து கதிர் பிடித்துள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி மற்றும் கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள் ஒன்று திரண்டு, சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்குள் […]
