குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம்பரத்தில் உள்ள ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த உடன் அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த டயானா என்ற மோப்பநாய் அழைத்துவரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் குருவாயூர் […]
