வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்ற சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக சென்ற நிதி ஆண்டில் மட்டும் வெங்காயம் ஏற்றுமதியானதில் சுமார் 50 சதவீதம் முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காயம் […]
