மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் (எஸ்பிஐ) லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் சிரமப்படுவது குறித்து வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் தேவேந்திர குமார் பதில் அளித்துள்ளார். அதில், “வங்கி படிவங்கள் மாநில மொழிகளில் உறுதி செய்யப்படுவது தொடர்பாக வங்கியின் தலைவருக்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றோம். வாடிக்கையாளர்கள் […]
