ஆப்கானிஸ்தானின் போர் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று உஸ்பெகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் Surxondaryo என்ற பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்குரிய ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உஸ்பெகிஸ்தானின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விபத்து ஏற்பட்ட விமானத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்கள் நாட்டிலிருந்து தப்ப முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் […]
