போர் காரணமாக உக்ரைன் நாடு 45 சதவிகிதம் பொருளாதார வீழ்ச்சியடைந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 47வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இந்த வருடம் உக்ரேனின் பொருளாதாரமானது 45 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததாக உலக வங்கி கூறுகின்றது. மேலும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியா நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்பட்டதை விட இந்த ஆண்டு பெரிய அளவில் பொருளாதார சேதம் ஏற்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. […]
