கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டி தொடர் நடைபெற்ற மைதானத்தில் உள்ள கழிவறை பகுதியில் வீராங்கனைக்கான உணவுகள் வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி காணொலி தற்போது வெளியாகியுள்ளது. यूपी […]
