தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர். அதன்படி ஜாங்கியா, அம்பேரி, ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர், வியட்நாம், செர்பியா, […]
