தமிழகத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்குவதற்கான நிதிகளை ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் முதல்வரின் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் படி, 2018-19, 2019-20 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளான எஸ்.பிரிதிவி சேகர், ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீ நிவேதா, சுனைனா சாரா குருவில்லா, பிரஜ்நேஸ், ஆர்.மோகன் […]
