கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசன் பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் மீதமுள்ள போட்டிகள் மெல்போர்னில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 11-வது சீசன் பிக் பேஷ் டி20 லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது . பலத்த பயோ பபுள் பாதுகாப்பில் இருந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது […]
