ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். இவரது தந்தை செல்ல முத்து தேவர் மற்றும் தாயார் சத்தந்தி முத்தாத்தாள் ஆவார். இந்த தம்பதியினருக்கு 1730 ஆம் வருடம் பிறந்த பெண் குழந்தைதான் வேலுநாச்சியார். அரசு உரிமைக்கு ஆண் வாரிசை தான் அரசர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் பிறந்தது பெண் குழந்தை. எனினும் வேலுநாச்சியாரின் தந்தை பெண் குழந்தை பிறந்து விட்டது என மனமுடையவில்லை. தன் மகளுக்கு குதிரை ஏற்றம், வாள்வீச்சு, சிலம்பம், வளரி போன்ற போர்க்கள பயிற்சிகளை கற்றுக்கொடுத்தார். […]
