தண்ணீர் தொட்டியில் இருந்து வாலிபர் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குமரகிரி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பி.எஸ்சி படித்துள்ளார். இதில் குமரகிரி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் பெற்றோர் அவரை கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் குமரகிரி வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் சாலை வழியாக நடந்து சென்றபோது குடிபோதையில் இருந்ததாக தெரிகின்றது. அப்போது திடீரென அங்குள்ள ஒரு தண்ணீர் தொட்டி […]