கீரனூர் தாலுகா அலுவலகம் முன் இரண்டு முதியவர்கள் வீட்டுமனை கேட்டு உண்ணாவிரதம் இருந்தார்கள். தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர் பகுதியில் 67 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2008-ஆம் வருடம் வீட்டுமனை கேட்டு அதே பகுதியில் வசித்த முதியவர்களான பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் குளத்தூர் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் சாகும் […]
