வீட்டில் பற்றி எரிந்த தீயை அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பெருமாள் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்ததால் புகைமூட்டம் உருவாகியுள்ளது. இதனைபார்த்த பெருமாள் தனது குடும்பத்துடன் வேகமாக வெளியே ஓடி வந்துள்ளார். […]
