விருதுநகர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுதிரி தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். சூலக்கரை சத்தியசாய் நகரை சேர்ந்த சித்ரா தேவி என்பவர் வீட்டில் பட்டாசு திரி தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சித்ராதேவி பலத்த காயம் அடைந்தார். சத்தம்கேட்டுவந்த அண்டை வீட்டார் சித்ரா தேவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீதம் அளவிற்கு தீக்காயம் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து […]
